மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

பரப்பாடியில் மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-09 21:10 GMT
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் பரப்பாடி மெயின் ரோடு அய்யா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்செல்வன் (வயது 47). இவர் பரப்பாடி மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல பணிக்கு சென்ற பொன்செல்வன் பரப்பாடி மின்சார வாரிய அலுவலகம் உள்ள வேப்பன்குளம் சாலை பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் வேலை செய்வதற்காக ஏறினார். அப்போது பொன்செல்வன் திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார், மின்சார வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொன்செல்வன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி பலியான பொன்செல்வனுக்கு கலையரசி (42) என்ற மனைவியும், வைஷ்லின் என்ற மகளும், வைகுண்டம், வைகரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.




மேலும் செய்திகள்