குடும்ப தகராறில் தந்தை-மகன் தற்கொலை

குடும்ப தகராறில் தந்தை, மகன் தற்கொலை செய்தனர்

Update: 2022-03-09 20:57 GMT
குடகு: குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பெலகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயது 76). இவரது மகன் கிரீஷ்(39). இருவரும் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் கிரீஷிற்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். சுப்பையா மற்றும் அவரது மனைவி காவேரியம்மா ஆகியோருடன் கிரீஷ் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிரீஷ் தந்தையை தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் அவர் மனம் நொந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி, வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தின் மரத்தில் தூக்கிட்டு சுப்பையா தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் மனுக்கு தெரியவந்தது. தந்தையின் சாவிற்கு தானே காரணமாகி விட்டதால் போலீசார் தன்னை கைது செய்ய கூடும் என்று கிரீஷ் அஞ்சினார். இதனால் பதற்றம் அடைந்த அவர் அதே தோட்டத்தின் அருகேயுள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் குறித்து விராஜ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்