பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-03-09 20:43 GMT
கருப்பூர்:-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மண்டல தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பணியாளர் நல சங்க தலைவர் சம்பத், செயலாளர் ஆனந்தராஜ், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் 4 பேரை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்தது மற்றும் ஆசிரியர் ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், மீண்டும் தொழிலாளர்களுக்கு பணி வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். தொழிலாளர் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்