கொலை வழக்கில் கைதான 3 பேர்,குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொலை வழக்கில் கைதான 3 பேர்,குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-09 20:24 GMT
சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ள மறவாமங்கலத்தை சேர்ந்தவர் சண்முகம்(வயது 34). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி புரசடைப்பு என்ற இடம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக காளையார்கோவில் போலீசார் நடத்திய விசாரணையில் மறவாமங்கலத்தை சேர்ந்த அமர்த்தியா பாண்டியன், அருண்குமார், சிறியூரை சேர்ந்த செல்லப்பாண்டி உள்பட 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அமர்த்தியா பாண்டியன், அருண்குமார் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஈடுபட்டவர்கள் உள்பட 13 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் ஏற்படுத்துபவர்கள் மற்றும் சாதி பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

மேலும் செய்திகள்