குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கன்னியாகுமரியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் இருதய ராஜா (வயது35). இவர் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி, இருதய ராஜா தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.
இதனை கலெக்டர் ஏற்று, இருதய ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இருதய ராஜாவை கன்னியாகுமரி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.