கிணற்றில் தொழிலாளி பிணம்
தக்கலை அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தார்
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பருத்திகாட்டுவிளையை சேர்ந்தவர் தங்கநாடார் (வயது62), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கநாடார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தங்கநாடார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தங்கநாடார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.