ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகை திருட்டு

ராஜபாளையத்தில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-03-09 20:10 GMT
ராஜபாளையம் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 41). இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் மதுரை எஸ்.பி.நத்தம்.  சம்பவத்தன்று மாரியப்பன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டு ராஜபாளையத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 26 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர்  ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நகை திருடிய மர்மநபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்