அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-09 20:07 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரத்தில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் வெள்ளத்துரை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரோந்து சென்ற ேபாது  அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டு இருந்த சங்கரன் (வயது 60) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து  30 கிலோ சரவெடிகள், முழுமையடையாத சோல்சாவெடிகள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்