தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ததற்காக பரிசு, சான்றிதழ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ததாக பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.;

Update: 2022-03-09 19:36 GMT
திருப்பத்தூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கிய சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் நகராட்சியில் நடந்தது. 

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு அலுவலர் ரவி வரவேற்றார்.

 நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழ்களை மற்றும் பரிசுகளை கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் சபியுல்லா ஆகியோர் வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அசோகன், வெற்றிகொண்டான், சையத்அபுபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் துப்பு ரவு ஆய்வாளர் விவேக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்