காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-09 19:20 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 29ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை தலைவர்கள் நிர்வாக கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்க இருந்துள்ளனர். அப்போது கூட்டம் நடைபெறும் அரங்கம் பூட்டப்பட்டு இருந்ததால் ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களுக்கும் கூட்டம் நடத்த அறை ஒதுக்கி தரவேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இச்சம்பவத்தை பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், பாலாஜி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து தலைவர்கள் சார்பில் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர். 
இச்சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்