வேளாண்மை துறை சார்பில் உழவர் திருவிழா

ஏலகிரிமலையில் வேளாண்மை துறை சார்பில் உழவர் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-09 19:18 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டம் வாயிலாக உழவர் திருவிழா மற்றும் பல்வேறு துறை சார்ந்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. 

விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஜோலார்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் குணசேகரன் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் ராதா வரவேற்றார். முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் வாசுதேவர் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், வேளாண்மை அலுவலர்கள் ராஜேஷ், அட்மா திட்ட அலுவலர் மேரி வீனஸ், தோட்டக்கலை உதவி அலுவலர் தமிழ்செல்வன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் தனியார் கல்லூரியின் பேராசிரியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்