தோல் தொழிற்சாலையில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-03-09 19:14 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மோட்டு கொல்லை பகுதியில் ஏஜாஸ் அஹமத் என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். 

நேற்று காலை தோல் தொழிற்சாலையில் இருந்து திடீரென புகை வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து தொழிற்சாலை நிர்வாகிகள் வந்து பார்த்தபோது தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதும், அங்கிருந்த நாற்காலி மற்றும் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிவதும் தெரிவித்தது. 

உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. 

தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்