புறாக்கள் திருட்டு

புறாக்கள் திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2022-03-09 19:09 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 45). இவர் தனது வீட்டின் கொல்லை பகுதியில் ஆடு மற்றும் புறாக்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் ஒரு ஆடு மற்றும் 30 ஜோடி புறாக்களை திருடிச்சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது ஆடு மற்றும் புறாக்கள் திருட்டுபோனதை கண்டு திருநாவுக்கரசு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்