நேரு யுவகேந்திரா சார்பில் மகளிர் தின விழா

நேரு யுவகேந்திரா சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-03-09 19:08 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த தம்டகோடி திருமலை சுப்பிரமணியசாமி கோவில் மலையடிவாரத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் மகளிர் தின விழா நடந்தது. 

விழாவுக்கு ஊராட்சி தலைவர் ரேணு தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் வேலாயுதம், ஊராட்சி துணைத் தலைவர் கவிதா சுதாகர், செவிலியர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனன் வரவேற்றார்.

விழாவில் கண்ணமங்கலம் இதய நிறைவு தியான மையம் சார்பில் இன்றைய பரபரப்பான சூழலில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களின் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டுக்கும் தியானம் மட்டுமே சிறந்த மருந்தாகும். 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தினசரி தியானம் செய்ய வேண்டும் என்று ேபசினார்கள். பின்னர் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

விழாவில் சுகாதாரப் பணியாளர் ராஜேஷ்கண்ணா, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கீதா, மோகன்பாபு, ஊராட்சி பணித்தள பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பவித்ரா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்