மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட வழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-09 19:07 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆரணி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட கூடுதல் மாவட்ட நீதிபதி (விரைவு நீதிமன்றம்) கே.விஜயா தலைமையில் நடந்தது. 

சார்பு நீதிபதி ஜி.ஜெயவேல், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.டி.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நீதிமன்ற தலைமை எழுத்தர் சி.பழனியப்பன் வரவேற்றார். 

முகாமில் கூடுதல் மாவட்ட நீதிபதி கே.விஜயா கலந்துகொண்டு பேசுகையில், வேலை வாய்ப்பிலும், படிப்பிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. 

அனைத்து இடங்களிலும் பெண்களின் பங்கு அதிகரித்து இருப்பதால் தற்போது வரதட்சணை குற்றங்கள் குறைந்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

பெண்கள் இன்று அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்க பெரியார், அம்பேத்கர் போன்றவர்களால் தான் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது’ என்றார். 

இதில் ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்செல்வி, வக்கீல் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர், செயலாளர் பாலாஜி, அரசு வக்கீல்கள் கே.ராஜமூர்த்தி, கே.ஆர்.ராஜன், எஸ்.கைலாஷ், மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ஜி.கோமதி, வக்கீல் சங்க முன்னாள் தலைவர்கள்  உட்பட பலரும் கலந்துகொண்டு பேசினர். 

முடிவில் வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்