லெட்சுமணன்பட்டி ஜல்லிக்கட்டில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் சிகிச்சை பலனின்றி சாவு

லெட்சுமணன்பட்டி ஜல்லிக்கட்டில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-09 19:00 GMT
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், லெட்சுமணன்பட்டியில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 230 வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கினர். அப்போது மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 43 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 10 பேர் திருச்சி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 
இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் இனியானூர் பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் பன்னீர்செல்வம் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 25) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த தமிழ்ச்செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்