தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து சாவு
தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து இறந்தார்.
அன்னவாசல்:
இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் வேலூர் மாவட்டம் அலமேலு மங்களாபுரத்தை சேர்ந்த குமார் மகன் கோகுலகிஷோர் (வயது 19) என்பவர் பி.எஸ்.சி. பிசியோெதரப்பி முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த கோகுலகிஷோர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு பின்னால் வந்த மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இலுப்பூர் போலீசார் கோகுலகிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.