பாஸ்போர்ட் பெற போலி ஆவணம் இளம்பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

பாஸ்போர்ட் பெற போலி ஆவணம் கொடுத்த இளம்பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-03-09 18:43 GMT
புதுக்கோட்டை:
பாஸ்போர்ட் பெற போலி ஆவணம்
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது43). இவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக திருச்சி பாஸ்போா்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவர் பள்ளி படிப்பு சான்றிதழ் தொடர்பானதில் போலியானதை தயாரித்து இணைத்துள்ளார். இதனை அதிகாரிகள் சோதனையின் போது கண்டுபிடித்தனர். 
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் செல்லதுரை புகார் அளித்தார். அதன்பேரில் ஆரோக்கியசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
3 பேர் மீது வழக்கு 
இதேபோல அறந்தாங்கியை சேர்ந்த ரஜாக் (45), புதுக்கோட்டை வந்தனாக்கோட்டையை சேர்ந்த கார்த்திகா (24) ஆகியோர் பாஸ்போர்ட்டிற்கு பிறப்பு சான்றிதழில் போலி ஆவணம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாகவும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தனித்தனியாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் ரஜாக், கார்த்திகா ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 பாஸ்போர்ட் பெற போலி ஆவணம் கொடுத்தது தொடர்பாக மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்