அரக்கோணத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் மயங்கி விழுந்து சாவு

அரக்கோணத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் மயங்கி விழுந்து இறந்தார்.;

Update: 2022-03-09 18:38 GMT
அரக்கோணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள், 1 மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இரவு பணியில் இருந்தார். அப்போது தீடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்