வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-03-09 18:37 GMT
விராலிமலை:
விராலிமலை தாலுகா இராஜகிரி காரமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா மகன் கருப்பையா (வயது 37). தொழிலாளியான இவர், தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு ராமகவுண்டம்பட்டி ரைஸ்மில் அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்பையாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்