அரியலூர் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
அரியலூர் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பணி அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
அரியலூர்,
விஷம் குடித்து தற்கொலை முயற்சி
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா கூவாகம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மனைவி பிரியங்கா (வயது 28). இவர் அரியலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, திடீரென குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பணி அழுத்தம் காரணமா?
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணி அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.