20 பஸ்களில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அகற்றம்

அரியலூரில் 20 பஸ்களில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.

Update: 2022-03-09 18:07 GMT
அரியலூர், 
அரியலூர் பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமையில் வாகன ஆய்வாளர் சரவணபவன் மற்றும் பணியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்களில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய ஹாரன்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை டிரைவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரை கூறப்பட்டது. இதனை மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் 20 பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்களை பணியாளர்கள் கழற்றி அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்