கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு முகாம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண் நீர் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-03-09 18:01 GMT
ஆண்டிப்பட்டி: 

தேனி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண் நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார். 

கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் கணபதி ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கண் நீர் அழுத்த நோய் குறித்தும், அதனால் உண்டாகும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன், உதவி நிலைய அலுவலர் டாக்டர் ஈஸ்வரன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ்ஹால் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்