அவலூர்பேட்டை சித்தகிரி முருகப்பெருமான் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது

அவலூர்பேட்டை சித்தகிரி முருகப்பெருமான் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது

Update: 2022-03-09 17:57 GMT

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே உள்ள அவலூர்பேட்டை வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு 9 மணிக்கு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சாமிக்கும், கொடிமரத்துக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். 

பின்னர் மதியம் 3 மணிக்கு தேசமங்கையர்க்கரசியின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு விழாக்குழு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். விழாக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவின் 10-ம் நாளான வருகிற 18-ந்தேதி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி சிறிய தேர்களை இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்