மாவட்ட அளவிலான கபடி போட்டி
தோகைமலை அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் 50 அணிகள் பங்கேற்றன.
தோகைமலை,
கபடி போட்டி
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்டிமலை வானம்பாடி கபடி குழு, நேரு இளைஞர் நற்பணி மன்றம், ஊர் பொதுமக்கள் சார்பில் 24-வது ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி விராச்சிலை ஈஸ்வரர் கோவில் முன்பு உள்ள வானம்பாடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன.
பரிசு-கோப்பை
இதில், முதல் பரிசு ரூ.30 ஆயிரத்து 001-யை கரூர் மாவட்ட ஆண்கள் சீனியர் கபடி குழுவும், 2-ம் பரிசு ரூ.20 ஆயிரத்து 0010-யை ஆர்டிமலை பால்காரர் சரவணன் நினைவு கபடி குழுவும், 3-ம் பரிசு ரூ.12 ஆயிரத்து 001 நாகப்பட்டினம் மாவட்டம் அஜய் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழுவும், 4-வது பரிசு ரூ.12 ஆயிரத்து 001 திருச்சி சிவலிங்கா கபடி சிம்மன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றனர். இவர்களுக்கு சுழல் கோப்பையும் வழங்கப்பட்டன.
மேலும் காலிறுதியில் தோல்வி அடைந்த அணிகளுக்கு சிறப்பு பரிசாக ரூ.2,500 மற்றும் சிறப்பாக விளையாடிய கபடி வீரர்களுக்கும், அணிகளுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. கபடி போட்டியை பொதுமக்கள், கபடி ரகசிர்கள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.