அரூர் அருகே பள்ளி மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

அரூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-09 17:44 GMT
அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவி தனது தோழியுடன் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நவாப்ஜான் (வயது 20) என்பவர் மாணவி மற்றும் அவரது தோழி ஆகிய 2 பேரையும் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி, அழைத்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் மோட்டார் சைக்கிளில் இடம் போதவில்லை. எனவே, முதலில் மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு விட்டு பின்னர் தோழியை அழைத்து செல்வதாக கூறி சென்றுள்ளார். வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய நவாப்ஜான் மாணவியை முட்புதருக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, மாணவி கூச்சல் போட்டதால் அவரது தோழி அங்கு வந்துள்ளார். இதனால் வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து மாணவி அரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நவாப்ஜானை கைது செய்தார்.

மேலும் செய்திகள்