தர்மபுரியில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரியில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்தும், கட்சி பணிகள் குறித்தும் விளக்கி பேசினார்.
தொடர்ந்து தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பா.ம.க. மாவட்ட அனைத்து நிலை புதிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர்கள் தேர்விற்கு விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை அறிவித்துள்ள குழு பொறுப்பாளர்களான இசக்கிபடையாட்சி, ஆலயமணி, அரசாங்கம், கரூர் பாஸ்கர், மயிலாடுதுறை அய்யப்பன் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.