அரூர் அருகே லாரி மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
அரூர் அருகே லாரி மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்.
அரூர்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கூத்தாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 30). இவர், அனுமன்தீர்த்தத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் அனுமன்தீர்த்தம் சென்றார். மாம்பட்டி காந்தி நகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.