கர்நாடகாவுக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது
பாலக்கோட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ராமர், சிவபெருமாள் மற்றும் போலீசார் பாலக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பாலக்கோடு மைதின் நகரில் வீட்டில் கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீ்ட்டில் சோதனை செய்தனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது25) என்பவர் 1,300 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.