கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் வாலிபர்கள் 3 பேர் கைது

கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் வாலிபர்கள் 3 பேர் கைது

Update: 2022-03-09 17:44 GMT


விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய மாணவி, விழுப்புரம் அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவரை அதே கிராமத்தை சேர்ந்த முத்தரசன்(24) என்பவர் கேலி, கிண்டல் செய்துள்ளார். பின்னர் இதை தட்டிக்கேட்ட மாணவியின் பெற்றோரை முத்தரசன் மற்றும் அவரது நண்பர்கள் அன்பரசன், சுதன் அரசன், முதலி, சரோஜா ஆகியோர் சேர்ந்து திட்டியதோடு வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தரசன் உள்ளிட்ட 5 பேர் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முத்தரசன், அன்பரசன் (30), முதலி (60) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்