சூளகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து 17 வயது சிறுவன் சாவு
சூளகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து 17 வயது சிறுவன் இறந்தான்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னப்பள்ளி பக்கமுள்ள மேடுபள்ளி காடு என்ற கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் தினேஷ்குமார் (17). இவன், சென்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில், மண் ஏற்றி கொண்டு சென்றான். அப்போது டிராக்டர் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தினேஷ்குமார் டிராக்டருக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.