தேன்கனிக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தேன்கனிக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-09 17:44 GMT
தேன்கனிக்கோட்டை, :
தேன்கனிக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஏ.வி.எஸ். குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சூடேஷ் (வயது 37). இவர் முனிபோயணதொட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தளி அருகே உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். 
இந்தநிலையில் நேற்று காலை அவர் குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள்  சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம், 2 வெள்ளி கொலுசுகள் திருட்டு போனது தெரியவந்தது. 
வலைவீச்சு
மேலும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி.யும் திருட்டு போனது. இதுகுறித்து சூடேஷ் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.
 இந்த திருட்டு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்