ஓசூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஓசூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
ஓசூர் அருகே ஜொனபண்டா கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது33). டிரைவர். இவரது மனைவி சில்பா (25). வெங்கடேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த வெங்கடேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.