குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா-பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-03-09 17:42 GMT
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று குண்டம் இறங்கும் விழா நடந்தது. இதற்காக 30 அடி நீளத்தில், 3 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இரவு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 
இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், 10 மணிக்கு தேரோட்டமும், இரவு 7 மணிக்கு வண்டி வேடிக்கையும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டமும், இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், 12-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 13-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

மேலும் செய்திகள்