ஓசூரில் "ஹோசியா" கட்டுமான பொருட்கள் கண்காட்சி நிறைவு விழா பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா கலந்து கொண்டனர்

ஓசூரில் ஹோசியா கட்டுமான பொருட்கள் கண்காட்சி நிறைவு விழாவில் பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா கலந்து கொண்டனர்.

Update: 2022-03-09 17:42 GMT
ஓசூர்:
ஓசூரில் செயல்பட்டுவரும் "ஓசூர் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கம்" (ஹோசியா) சார்பில், கட்டுமான பொருட்களின் கண்காட்சி, ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் உள்ள "ஹில்ஸ்" ஓட்டலில், 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில், ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். மேலும் இதில், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம், சங்கத்தின் தலைவர் என்.ராஜேந்திரன், செயலாளர் வெங்கட்ரமணி, பொருளாளர் செந்தில்குமார், இணை செயலாளர் அய்யப்பன், உதவி தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் தலைவர்கள் நடராஜன், தர்மன், வாசுதேவன் மற்றும் தொழில் அதிபர்கள் ஜே.பி. டெவலப்பர்ஸ் ஜெயப்பிரகாஷ், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். எக்ஸ்போ தலைவர் மணிகண்டன், நினைவு பரிசுகள் வழங்கினார். மேலும் சிறந்த அரங்குகளுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, பொறியாளர்கள் சுரேஷ்பாபு, சிவானந்தா, நவநீதகுமார், தேவ்பால், வேலு, பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்