பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தினர் கோரிக்கை மனு

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனா்.

Update: 2022-03-09 17:35 GMT
கரூர்
கரூர், 
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமையில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன், வன்னியர் சங்க பசுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று ெகாடுத்தனா். அந்்த மனுவில், நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் மாதம் வெளியான ஜெய்பீம் திரைப்படம் சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இருந்்தது. அதனால் அவா் வன்னியர்களிடம் ெபாதுமன்னிப்பு ேகட்கும் வரை வருகிற 10-ந்்தேதி சூா்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தினை கரூர் மாவட்டத்தில் உள்ள திரை அரங்குகளில் வெளியிட அனுமதிக்க கூடாது என அதில் கூறியிருந்தனர். அப்போது திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் இல்லாத நிலையில் திரையரங்க மேலாளரிடம் மனுவை கொடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்