வளவனூர் குமாரபுரியில் ராகவேந்திர சுவாமியின் 427 வது அவதார தினவிழா
வளவனூர் குமாரபுரியில் ராகவேந்திர சுவாமியின் 427 வது அவதார தினவிழா
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் குமாரபுரியில் நரையூர் செல்லும் சாலையில் ராகவேந்திர சுவாமிகள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராகவேந்திர சுவாமியின் 427-வது அவதார தினவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் வளவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு ராகவேந்திர சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து குருவி வேங்கை தொல்காப்பியன் தலைமையில் ராகவேந்திரா பக்தி பஜனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சங்கரலிங்கம் மற்றும் வளவனூர், காராமணிக்குபபம் கிராம மக்கள் செய்திருந்தனர்.