தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரசு சொகுசு பஸ் இயக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு பஸ் இயக்கப்பட்டது. இதனை புள்ளம்பாடி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கொரோனா கால கட்டத்தால் அந்த சொகு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் அதிக காசு கொடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட புள்ளம்பாடி - சென்னை அரசு சொகுசு பஸ்சை இயக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டேனியல், புள்ளம்பாடி, திருச்சி.
பூட்டியே கிடக்கும் பூங்கா
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தநகரில் அறிஞர் அண்ணா பூங்கா உள்ளத. இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளத. தற்போது நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் பூங்கா பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பொழுதை களிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டியே கிடக்கும் பூங்காவை உடனடியாக பாராமித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி.
சாலையில் மெகா பள்ளம்
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம் வேளகந்தம் பஸ் நிறுத்தம் அருகே முசிறி-புலிவலம் சாலையின் குறுக்கே குழி தோண்டி குழாய் மூலம் காவிரி குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை குழி சரிசெய்யப்படாமல் அப்படியே பள்ளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மெகா பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரேஷ், முசிறி. திருச்சி.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிகிறது. மேலும் இந்த மாடுகளில் சாலையில் படுத்து தூங்குகிறது. சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டைப்போட்டு கொள்கிறது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெங்கடேஷ், திருச்சி.
வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரத்திற்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பஸ்களின் டிரைவர்கள் முறையாக பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தாமல் சாலையின் நடுவே நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி வருகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது. மேலும் சில நேரங்களில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக செல்கிறது. இதனால் சில விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவரஞ்சினி, திருச்சி.