மாவட்ட ஊராட்சி குழு சார்பில் கள்ளக்குறிச்சியில் மகளிர் தின விழா

மாவட்ட ஊராட்சி குழு சார்பில் கள்ளக்குறிச்சியில் மகளிர் தின விழா ஊராட்சி குழு தலைவர் தலைமையில் நடந்தது.

Update: 2022-03-09 16:51 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் உலக மகளிர் தின விழா மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 
விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு தலைவர் அலமேலு ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக அருணா வரவேற்றார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்  கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.  விழாவில் பங்கேற்ற அனைவரும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து பங்கேற்றனர்.

இதில, இளநிலை பொறியாளர் இளந்தென்றல், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் பணிபுரியும் பிரியதர்சினி, கலையரசி, கிருஷ்ணவேணி, நிவேதா, சாந்தி, தர்ஷினி உள்பட அனைத்து அலுவலர் மற்றும் மகளிர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்