பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் சிறப்பு டி ஜி பி மீதான விசாரணை 17 ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் சிறப்பு டி ஜி பி மீதான விசாரணை 17 ந் தேதிக்கு ஒத்திவைப்பு;
விழுப்புரம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல், குறுக்கு விசாரணையை தொடங்கி 7 நாட்கள் நடத்தியுள்ள நிலையில் இன்னும் அந்த விசாரணை நிறைவடையவில்லை. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகினார். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து அவர்களது வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாதன், வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.