தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-09 16:40 GMT
கரூர்
நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்வதி, புதுக்கோட்டை.


குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி அருகே தனியார் வங்கியின் தலைமை இடத்திற்கு எதிரே சாலையோரமாக குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனை தெருநாய்கள் கிளறி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.

அரசு சொகுசு பஸ் இயக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு பஸ் இயக்கப்பட்டது. இதனை புள்ளம்பாடி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கொரோனா கால கட்டத்தால் அந்த சொகு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் அதிக காசு கொடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட புள்ளம்பாடி - சென்னை அரசு சொகுசு பஸ்சை இயக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
டேனியல், புள்ளம்பாடி, திருச்சி.


பூட்டியே கிடக்கும் பூங்கா
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தநகரில்  அறிஞர் அண்ணா பூங்கா உள்ளத. இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளத. தற்போது நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் பூங்கா பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பொழுதை களிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டியே கிடக்கும் பூங்காவை உடனடியாக பாராமித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி.


சாலையில் மெகா பள்ளம்
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம் வேளகந்தம் பஸ் நிறுத்தம் அருகே முசிறி-புலிவலம் சாலையின் குறுக்கே குழி தோண்டி குழாய் மூலம் காவிரி குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை குழி சரிசெய்யப்படாமல் அப்படியே பள்ளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மெகா பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரேஷ், முசிறி. திருச்சி.

மேலும் செய்திகள்