தியாகதுருகத்தில் சமுதாய வளைகாப்பு விழா

தியாகதுருகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-03-09 16:39 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகத்தில் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.


இதற்கு தியாகதுருகம் ஒன்றியக் குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்முருகன், இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா வரவேற்றார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்தார். 

விழாவில் தியாகதுருகம் பேரூராட்சி தலைவர் வீராசாமி, துணை தலைவர் சங்கர், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மலையரசன், எத்திராசு, மடம் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர்கள் அண்ணாதுரை, சாந்தி கணேசன், மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன், அவை தலைவர்கள் சாமிதுரை, நூர்முகமது, பொருளாளர் சுப்பு இளங்கோவன் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் மலர்கொடி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்