திண்டுக்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

திண்டுக்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-09 16:06 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் எழில்நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. கடந்த 4-ந்தேதி இவர், அப்பகுதியில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். ரெயில்வே திருமண மண்டபம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், கண்இமைக்கும் நேரத்துக்குள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணிடம் நகையை பறித்தது திண்டுக்கல் கிழக்கு மருதாணிகுளம் பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 25), செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனியை சேர்ந்த சிவக்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகையையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்