திருச்செந்தூர் கோவிலில் புதிய தரிசன நடைமுறை அமலுக்கு வந்தது

திருச்செந்தூர் கோவிலில் புதிய தரிசன நடைமுறை அமலுக்கு வந்ததால் புதன்கிழமை முதல் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Update: 2022-03-09 15:54 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிலில் புதிய தரிசன நடைமுறை புதன்கிழமை அமலுக்கு வந்தது. ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
புதிய நடைமுறை அமல்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யவும், அங்கு ஆயுதப்படை ேபாலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கோவிலில் ரூ.250 சிறப்பு கட்டண தரிசனம், ரூ.20 கட்டண தரிசனம் ஆகியவை புதன்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது. கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம், இலவச பொது தரிசனம் மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனத்தில் வரிசையாக வந்த பக்தர்கள், மகா மண்டபத்தில் இருந்து சமமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு
மேலும் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக ஆயுதப்படை போலீசார் 60 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் புதன்கிழமை கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை எளிமையாக இருந்தது என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்