தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் மே 5-ந்தேதி மாநில மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் மே 5-ந்தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளது என்று மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல்:

மாநில மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு மண்டல தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு திருச்சியில் வருகிற மே மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மாநாட்டில் திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து 35 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பார்கள். அன்றையதினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
வாடகை உயர்வு
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளின் வாடகை 30 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பல கடைகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தரமற்ற பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து, அங்கு ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும். ஆனால் அங்கு செல்லாமல் சாமானிய வியாபாரிகளின் கடைகளில் தான் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்துகின்றனர். இதனால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ரூ.1 லட்சம் கோடி வருவாய்
பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தும் போது மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைத்தால் போதும் என்று கூறினார். ஆனால் தற்போது ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. ரஷியா-உக்ரைன் போரால் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக உயரும். இதனை தடுக்க அரசிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.