கோத்தகிரி பாலக்காடு இடையே அரசு பஸ் சேவை மீண்டும் தொடக்கம்

2 ஆண்டுக்கு பின்னர் கோத்தகிரி-பாலக்காடு இடையே பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

Update: 2022-03-09 15:17 GMT
கோத்தகிரி

2 ஆண்டுக்கு பின்னர் கோத்தகிரி-பாலக்காடு இடையே பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கேரள மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் கேரள மக்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார் கள். அவர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று கோத்தகிரி பகுதியில் இருந்து பாலக்காட்டுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரியில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் பரவல் குறைந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்து மீண்டும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

பஸ் இயக்க கோரிக்கை

ஆனால் கோத்தகிரியில் இருந்து பாலக்காட்டுக்கு அரசு பஸ் இயக்கப்பட வில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த கேரள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் ஊட்டிக்கோ அல்லது கூடலூருக்கோ சென்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது.  

எனவே கோத்தகிரியில் இருந்து மீண்டும் பாலக்காட்டுக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அதிகாரி களை சந்தித்து கோத்தகிரி ஈழுவா-தீயா நலசங்கம், கேரள சமாஜம் மற்றும் புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன.

சேவை தொடக்கம்

இதையடுத்து கோத்தகிரியில் இருந்து பாலக்காடுக்கு அரசு பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 6.20 மணிக்கு பஸ் சேவை தொடங்கியது. 

2 ஆண்டுக்கு பின்னர் சேவை தொடங்கி உள்ளதால் பஸ் புறப்படுவதற்கு முன்பு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இந்த பூஜையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பஸ்சுக்கு மாலை அணிவித்து அனுப்பி வைத்தனர். பஸ் சேவை தொடங்கப் பட்டு உள்ளதால் கேரளாவை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்