கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

Update: 2022-03-09 14:34 GMT
கருமத்தம்பட்டி

திருப்பூர் வ.உ.சி. நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் மணிகண்டன்(23). கோவை முத்துகவுண்டன்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருடன், அவரது தம்பி சிவபிரகாஷ்(22) உள்பட 6 பேர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணியளவில் மணிகண்டனுடன் வேலை செய்து வரும் கணேஷ் என்பவரது பிறந்தநாள் நிகழ்ச்சி, அந்த நிறுனத்தின் குடோனுக்கு முன்பு உள்ள கிணற்றின் அருகே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட சிவபிரகாஷ் கால் தவறி கிணற்றில் விழுந்தார். இதுகுறித்து சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள், கிணற்றுக்குள் விழுந்த சிவபிரகாஷை மீட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்