உளுந்து பயிர்களை வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
மழையால் சேதமடைந்த உளுந்து பயிர்களை வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
வாய்மேடு:-
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள மணக்குடி, கொளப்பாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவம் தவறி பெய்த மழையால் உளுந்து பயிர்கள் சேதம் அடைந்தன. இந்த நிலையில் சேதமடைந்த உளுந்து பயிர்களை வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . இந்த ஆய்வின் போது தலைஞாயிறு தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாநில விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினருமான மகா குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வகுமார், அசோக்குமார், துணைத் தலைவர் ரமேஷ், வேளாண் அலுவலர் அமுதா, விதை அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஜீவா உள்பட பலர் உடனிருந்தனர்.