மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.4 லட்சம் திருட்டு

மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-03-09 13:02 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே நாலூர் கிராமத்தில் உள்ள கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் தேவி (வயது 42). இவரது கணவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தேவி நிலம் வாங்குவதற்காக மீஞ்சூர் பேங்கில் உள்ள சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தன்னுடைய தாயின் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை தான் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் சீட்டை திறந்து அதன் உள்ளே வைத்து பூட்டி உள்ளார்.

பின்னர் அருகே உள்ள ஓட்டலில் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். பிரியாணியுடன் இருசக்கர வாகனம் அருகே வந்த போது சீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்தபோது அதில் இருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்