மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
குடவாசல் அருகே குருவியை பிடிக்க உயர்மின்கோபுரத்தில் ஏறிய வாலிபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
குடவாசல்;
குடவாசல் அருகே குருவியை பிடிக்க உயர்மின்கோபுரத்தில் ஏறிய வாலிபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
குருவி கூடு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வடகண்டம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 26). இவரது வீட்டின் அருகே உள்ள உயர்மின்கோபுரத்தில் குருவிகள் கூடு கட்டியிருந்தன. இந்த குருவிகளை பிடிக்க மணிகண்டன் உயர்மின்கோபுரத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி மணிகண்டன் உடல் மின்கம்பியில் உரசியது.
பாிதாப சாவு
இதில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இது குறித்து அவரது தாய் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.